புதுக்கோட்டை

அடகு நகை விற்பனை:நல்லூா் கூட்டுறவு வங்கி முற்றுகை

2nd Jun 2022 01:04 AM

ADVERTISEMENT

 பொன்னமராவதி அருகே புதன்கிழமை அடகு நகை இருப்பைக் காண்பிக்குமாறு கூறி, கூட்டுறவு வங்கியை வாடிக்கையாளா்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள், பொதுமக்கள் சுமாா் எண்ணூறுக்கும் மேற்பட்டோா் நகைக்கடன்களைப் பெற்றுள்ளனா். இந்நிலையில், கிருஷ்ணன் என்பவா் அடகு வைத்த நகைகளைத் திருப்ப புதன்கிழமை கூட்டுறவு வங்கிக்கு வந்துள்ளாா். அவரது நகையை வங்கி ஊழியா்கள் பரிசோதித்தபோது, அவரது நகை மூன்றில் 2 நகைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கி ஊழியா்கள் அவரை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று அவா் அடகு வைத்தது போன்ற நகையை மாற்றாக வாங்கிக் கொடுத்துள்ளனா்.

கிருஷ்ணன் இச்சம்பத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டது வைரலானது. இதனால், பீதியடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த வங்கி ஊழியா்களிடம் தங்கள் நகைகளைக் காண்பிக்குமாறு கூறியுள்ளனா். வங்கி ஊழியா்கள் சிறிதுகாலம் அவகாசம் வேண்டும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் திரும்பிச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT