புதுக்கோட்டை

இடம் இருந்தால் படம்வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்பு

2nd Jun 2022 01:04 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டையில் தச்சன்குறிச்சியில் இருந்து கறம்பக்குடி செல்லும் அனைத்து வகை வாகனங்கள் கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இதேபோல் கந்தா்வக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள விராலிப்பட்டி வரை செல்லும் நெடுஞ்சாலை துறை அலுவலா்கள் வாகனக் கணக்கெடுப்பில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஈடுபட்டனா். இதுகுறித்து, அலுவலா்களிடம் கேட்டபோது, தமிழ்நாடு அரசு மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில், கந்தா்வகோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளா் உத்தரவின்படி, வாகனங்களின் போக்குவரத்து கணக்கெடுக்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT