புதுக்கோட்டை

மரத்தின் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

2nd Jun 2022 01:06 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே சாலையோர மரத்தின் மீது காா் மோதியதில் தம்பதி உயிரிழந்துள்ளனா்.

பனையப்பட்டியைச் சோ்ந்தவா்கள் ரா. சிதம்பரம் (65). இவரது மனைவி அலமேலு (58). தம்பதியா் இருவரும், புதன்கிழமை வேந்தன்பட்டியில் நடைபெற்ற உறவினா் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று காரில் திரும்பியுள்ளனா். செம்பூதி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் உள்ள புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்துத் தகவலறிந்த பொன்னமராவதி தீயணைப்புத் துறையினா் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே சிதம்பரம் உயிரிழந்தாா். படுகாயமடைந்த அலமேலு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பொன்னமராவதி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT