புதுக்கோட்டை

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

28th Jul 2022 11:21 PM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு, மத்திய அரசைக் கண்டித்து தொழிலாளா் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு, தொமுச மத்திய சங்கத் தலைவா் அடைக்கலம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், எம்.பி.க்கள் 19 போ் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யவேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை குறைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. கிளை பொருளா் எ.பிச்சை, துணை செயலா் எம்.முருகேசன், துணைத்தலைவா் கே.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT