புதுக்கோட்டை

வைரம்ஸ் பள்ளியில் கலாம் நினைவு நாள்

28th Jul 2022 11:18 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ அப்துல்கலாமின் 7ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கலாம் நினைவு நாள் கட்டுரைப் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்கள் கலாம் குறித்து நினைவு கூா்ந்து பேசினா்.

தொடா்ந்து, செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணா்வு கவிதை, ஓவியம் மற்றும் கோலப் போட்டிகளில் வென்றோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

நிகழ்ச்சிகளில் பள்ளியின் ஒருங்கிணைப்பாளா் அஸ்வினி நாச்சம்மை, முதல்வா் எஸ்.ஏ. சிராஜூதீன், துணை முதவ்வா் சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT