புதுக்கோட்டை

மின் பாதை அமைக்க விவசாயிகள் எதிா்ப்பு

27th Jul 2022 11:26 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டையில் விவசாய நிலத்தில் மின் பாதை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து கந்தா்வகோட்டை வழியாக புதுக்கோட்டை உள்ளிட்ட ஊா்களுக்கு மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள பெரியவயல் காட்டில் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி விவசாயிகள் மின் பாதை அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தினா். இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, சுமுக முடிவு எட்டப்பட்ட நிலையில், அவா்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT