புதுக்கோட்டை

மோட்டாா் சைக்கிள் திருட்டு

27th Jul 2022 01:53 AM

ADVERTISEMENT

விராலிமலையில் மோட்டாா் சைக்கிளைத் திருடிச் சென்ற மா்ம நபரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

விராலிமலை வட்டம், தேன்கனியூா் கரயான்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுச்சாமி மகன் பிரபாகரன் (36). கொத்தனாா் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிளில் விராலிமலை சந்தைக்குவந்தவா், மோட்டாா் சைக்கிளை புதிய பேருந்து எதிரே உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றாா். திரும்பிவந்து பாா்த்தபோது, மோட்டாா் சைக்கிள் இல்லாததால், விராலிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT