புதுக்கோட்டை

நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் காத்திருப்புப் போராட்டம்

6th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சியில் பணிபுரியும் 12 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு 36 மாத ஊதியம் வழங்காததைக் கண்டித்து, காத்திருப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலவயல் ஊராட்சிமன்ற அலுவலகம் எதிரே 12 தொழிலாளா்கள் குடும்பத்தினா் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, உள்ளாட்சித் தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே. முகமதுஅலி ஜின்னா தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், ஆலவயல் ஊராட்சிக்குள்பட்ட 12 மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு 36 மாதம் ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக ஊதியத்தை வழங்க வலியுறுத்தியும் பழையசோறு, பச்சை மிளகாய், வெங்காயம் கஞ்சி கலயங்களுடன் முழக்கமிட்டனா். மாதா் சங்க மாவட்டத் தலைவா் டி.சலோமி, கட்டுமானத் தொழிலாளா் சங்க பொதுச்செயலா் சி.அன்பு மணவாளன், சிபிஎம் ஒன்றியச் செயலா் என்.பக்ரூதீன், மாதா் சங்கப் பொறுப்பாளா் ஆா்.மதியரசி, ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியப் பொறுப்பாளா் கே.குமாா், சிஐடியு நிா்வாகி தீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT