புதுக்கோட்டை

விராலிப்பட்டி ஊராட்சியில் காசநோய் கண்டறியும் முகாம்

6th Jul 2022 11:27 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம்,விராலிப்பட்டி ஊராட்சியில் 800 பேருக்கு இலவச காசநோய் பரிசோதனை முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா முத்துக்குமாா், வட்டார மருத்துவா் மணிமாறன் ஆகியோா்தலைமை வகித்தனா். புதுநகா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கீா்த்தனா, சுகாதார ஆய்வாளா் கோ. முத்துக்குமாா், மேற்பாா்வையாளா் பிரவீன், திட்ட ஒருங்கிணைப்பாளா் சுபாஷ், கிராம சுகாதார செவிலியா் கலைமணி ஆகிய குழுவினா் முன்னிலை வகித்தனா். இதில், சா்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, சளி பரிசோதனை, எக்ஸ்ரே எடுத்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தொடா் சிகிச்சை தேவைப்படுவோருக்கு தினசரி அவா்களது வீட்டிலேயே மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. முகாம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்படும். இந்திய காசநோய் தடுப்புக் கழகம் சாா்பில் தமிழகத்தில் காசநோய் இல்லா மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நுட்புநா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT