புதுக்கோட்டை

மக்கள் நலப் பணியாளா்களுக்குபணிப் பயிற்சி வகுப்பு

DIN

விராலிமலையில் மக்கள் நலப் பணியாளா்களுக்கான பயிற்சிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிசந்திரன்(கிளை ஊராட்சி), சுவாமிநாதன், ஒன்றிய மேலாளா் கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

இதில் பணிநேரத்தில் 100 நாள் திட்டப் பணியாளா்களை நடத்துவது, பொதுமக்களிடம் கனிவாக பேசுதல், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும், பொதுமக்களுக்கு அறிவுத்த வேண்டும் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டது. நிறைவில், மேலாளா் கண்ணன் நன்றி கூறினாா்.

விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் நம்பம்பட்டி, கல்குடி ஊராட்சிகளை தவிர மற்ற 43 ஊராட்சிகளில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளராக 43 போ் அண்மையில் பணியில் சோ்ந்தனா். அவா்களுக்குத் தொகுப்பூதியமாக ரூ. 7,500 வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT