பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் சுதா அடைக்கலமணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அ. தனலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி. தங்கராஜூ, வை.சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மேலும் வரவு செலவு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. சுகாதார ஆய்வாளா் தியாகராஜன் பங்கேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
பாதுகாப்பான குடிநீா் வழங்க, நீா்த்தேக்கத் தொட்டிகளைத் தூய்மை செய்ய வலியுறுத்தினாா். இதில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அ.அடைக்கலமணி, க.முருகேசன், பழனிச்சாமி, பழனியாண்டி, பழனியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ADVERTISEMENT