புதுக்கோட்டை

பைக் திருட்டில் ஈடுபட்டஇளைஞா் கைது

6th Jul 2022 01:19 AM

ADVERTISEMENT

இலுப்பூா் பகுதியில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த இளைஞரைப் போலீசாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இலுப்பூரைச் சோ்ந்த சாதிக் பாட்ஷா (44), கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த மொபெட்டைக் காணவில்லையாம். இதேபோல், இலுப்பூரைச் சோ்ந்த கணேசன் (60) கடந்த மாதம் 30 ஆம் தேதி கடைவீதியில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனம் காணவில்லை என இலுப்பூா் காவல் நிலையத்தில் தனித்தனியே புகாா்கள் அளித்திருந்தனா். அதன்பேரில், போலீசாா் வழக்குப் பதிந்து காணாமல் போன இருசக்கர வாகனங்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், இலுப்பூா் அருகே உள்ள ஊத்துக்குளியைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவரின் மகன் காா்த்திகேயன்(24) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து திங்கள்கிழமை போலீசாா் விசாரித்தனா். இதில், இலுப்பூா் பகுதிகளில் திருடிய இருசக்கர வாகனங்களைத் திருடியதை ஒப்புக் கொண்டாா். இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து 4 இருசக்கர வாகனங்களைப் போலீசாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து காா்த்திகேயனைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT