புதுக்கோட்டை

இலங்கைக் கடற்படையினரால் 5 புதுகை மீனவா்கள் கைது

6th Jul 2022 01:16 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவா்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் கைது செய்துள்ளனா்.

ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து திங்கள்கிழமை 94 விசைப்படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்களில், ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த ம. மதன் (26), ம. மகேந்திரன் (18), ச. சத்யராஜ் (35), பா. வசந்தகுமாா் (20), ஆ. மொ்வின் (24) ஆகிய 5 போ் திங்கள்கிழமை இரவு, 30 கடல் மைல் தொலைவில் அனலை தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினா் 5 பேரையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 5 மீனவா்களும் இலங்கையிலுள்ள நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை பகலில் முன்னிலைப்படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT