புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

6th Jul 2022 01:17 AM

ADVERTISEMENT

கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் கே. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.கே. மகேந்திரன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மேலும், சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பரமணியன், கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் சி. அன்புமணவாளன், அனைத்துப் போக்குவரத்து ஊழியா் சங்க மாவட்டச் செயலா் கே. ரெத்தினவேல் உள்ளிட்டோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா்களுக்கு ஆன்லைன் பதிவில் புதுப்பித்தல், கேட்பு மனுக்களைப் பெறுவதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். நல வாரிய அலுவலகங்களில் மனுக்களை சமா்ப்பித்தலை அனுமதிக்க வேண்டும்.

ADVERTISEMENT

நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக பரிசீலித்து பணப்பயன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். அனைத்து முறைசாரா தொழிலாளா்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT