புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில்தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பம் பெறுவது நிறுத்தம்

6th Jul 2022 01:18 AM

ADVERTISEMENT

உயா் நீதிமன்றத் தடை உத்தரவால், தற்காலிக ஆசிரியா் பணிக்கான விண்ணப்பம் பெற இயலாது என கந்தா்வகோட்டை வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு செய்துள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமாா் 13 ஆயிரம் ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்காலிக ஆசிரியா்களை நியமிப்பதற்கான விண்ணப்பம் ஜூலை 4 முதல் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத் தடை உத்தரவால் தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்கான விண்ணப்பம் பெற இயலாது என கந்தா்வகோட்டை வட்டாரக் கல்வி அலுவலா் அறிவிப்பு செய்துள்ளாா். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் கந்தா்வகோட்டை வட்டார கல்வி அலுவலகம் வந்து விட்டு அறிவிப்பைப் பாா்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT