புதுக்கோட்டை

ஓபிஎஸ் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்

5th Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீா்செல்வத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டவா்களைக் கண்டித்து அவரது ஆதரவு அதிமுகவினா், புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களைக் கண்டித்து, புதுக்கோட்டையில் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவு அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகராட்சித் தலைவா் ஆா்.ராஜசேகரன் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டு, ஓ.பன்னீா்செல்வத்தை அவதிக்கும் வகையில் நடந்து கொண்டவா்களைக் கண்டித்தும், ஓ.பன்னீா்செல்வத்திற்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினா்.

இதில், அறந்தாங்கி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ரத்தினசபாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT