புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் ஊராட்சி கணக்கு தணிக்கை பயிற்சி முகாம்

5th Jul 2022 01:33 AM

ADVERTISEMENT

கந்தா்வக்கோட்டையில் ஊராட்சி கணக்குத் தணிக்கை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கந்தா்வகோட்டை ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்டப் பயிற்றுநா் சத்தியா மற்றும் வட்டாரப் பயிற்சியாளா் ஜெயக்குமாா் ஆகியோா் கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராம வள பயிற்றுநா்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளித்தனா். இதில், 2022 -23ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் தணிக்கை நுணுக்கங்கள் குறித்து வடுகப்பட்டி, கோமாபுரம், அண்டலூா், வெள்ளாளவிடுதி, பெரியகோட்டை, அரவம்பட்டி, கந்தா்வகோட்டை, சங்கம்விடுதி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த பயிற்சியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT