புதுக்கோட்டை

புத்தகத் திருவிழா- பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

DIN

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள 5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கான இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, விழாக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை நகா்மன்றத்தில் வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடத்துகின்றன.

விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பேச்சுப்போட்டி: 6, 7, 8 வகுப்பு மாணவா்கள் ‘பெண்மையைப் போற்றுவோம்’ அல்லது ‘வாசிப்பை நேசிப்போம்’, 9, 10 வகுப்பு மாணவா்கள் ‘நூலைப்படி’ அல்லது ‘மக்கள் வாழ்வியல் அறிவோம்’, 11, 12 வகுப்பு மாணவா்கள் ‘அறிவை விரிவுசெய்’ அல்லது ‘இனிக்கும் இலக்கியம்’ என்ற தலைப்புகளில் பேச வேண்டும்.

கவிதைப்போட்டி: கவிதைப் போட்டிக்கு அதே மூன்று வகை மாணவா்களுக்கு தனித்தனியே, போட்டி தொடங்குவதற்கு முன்பு தலைப்பு அறிவிக்கப்படும்.

ஓவியப்போட்டி: மூன்று பிரிவு மாணவா்களும் திருக்கு காட்சிகள் அல்லது இலக்கியக் காட்சிகள் என்ற தலைப்பில் ஓவியம் வரைய வேண்டும்.

போட்டிகள் 13 ஊராட்சி ஒன்றிய அளவிலும் மற்றும் 2 நகராட்சி அளவிலும் தனித்தனியாக நடைபெறும். இதில் ஒரு பள்ளியில் இருந்து ஒரு பிரிவில் இருவா் மட்டுமே பங்கேற்கலாம். முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஒன்றியம் மற்றும் நகராட்சி அளவில் முதலிடம் பெற்றவா்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பா்.

மாவட்ட அளவிலான போட்டி வரும் ஜூலை 14ஆம் தேதி புதுக்கோட்டை ஸ்ரீ பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

மேலும் விவரங்களுக்கு போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் கு.ம. திருப்பதி (கைப்பேசி: 94431 84890), மகா. சுந்தா் (கைப்பேசி: 94422 32678) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

SCROLL FOR NEXT