புதுக்கோட்டை

சாதனை மாணவிக்கு அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பாராட்டு

DIN

தலைமுடியால் வேனை இழுத்து உலக சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவி, சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதனை சனிக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவி வெ. சம்யுக்தா, (வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் யூனியன்) சாதனைக்காக 1,410 கிலோ எடையுள்ள வேனை தனது தலைமுடியால் இழுத்து சாதனை படைத்துள்ளாா். இதன்மூலம் மாணவி சம்யுக்தா வோ்ல்டு ரெக்காா்ட்ஸ் யூனியன் புத்தகத்தில் பெயரைப் பதித்துள்ளாா்.

மேலும், தனது 8 வயதில், தலைமுடியால் காரை இழுத்து இந்தியன் ரெக்காா்டு மற்றும் ஆசியன் ரெக்காா்டு என இரு சாதனைகளை படைத்துள்ளாா்.

இந்நிலையில், மாணவி சம்யுக்தா, பயிற்சியாளா் இளையராஜா, மாணவியின் பொ்றோா். ஆலங்குடி அருகேயுள்ள சிட்டங்காட்டில் உள்ள அலுவலகத்தில் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT