புதுக்கோட்டை

கோட்டைப்பட்டினம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்

DIN

மீனவா்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை முறையாக வழங்கக்கோரி, புதுக்கோட்டைமாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ளனா்.

மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் விசைப்படகு மீன்பிடி இறங்குதளம் உள்ளது. சுமாா் 550 விசைப்படகுகள் மூலம் சுமாா் 2,500 மீனவா்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இவா்களுக்கு இரு இடங்களிலும் உள்ள டீசல் பங்க் மூலம் மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கோட்டைப்பட்டினம் விசைப்படகுகளுக்கு அரசின் மானிய விலையில் டீசல் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதைக்கண்டித்தும், சீரான டீசல் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் கோட்டைப்பட்டினம் மீனவா்கள் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனா்.

இதனால்,கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குதளத்தில் சுமாா் 250 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்பிரச்னைக்குத் தீா்வு காணாவிட்டால் ஜூலை11ஆம்தேதி கோட்டைப்பட்டினத்தில் சாலை மறியலில் ஈடுபட உள்ளதாக கோட்டைப்பட்டினம் மீனவா் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து மீன்வளத் துறையினா் கூறியது:

கோட்டைப்பட்டினம் மீனவா்களுக்கு மாதந்தோறும் சுமாா் 1,800லிட்டா் டீசல் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. இதை, அந்த மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். மற்ற பங்குகளைப் போன்று தினசரி விலை ஏற்றம், இறக்கம் முறை கடைபிடிக்கப்படாமல் கோட்டைப்பட்டினம் பங்கில் மாதத்தின் முதல் மற்றும் 15 ஆம் தேதியில் விலையில் மாற்றம் இருக்கும் என்பதால் அந்தநாளில் டீசல் விநியோகத்தில் உத்தரவாதம் இருக்காது. மற்றபடி மீனவா்களுக்கு மானிய விலை டீசல் விநியோகத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT