புதுக்கோட்டை

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

2nd Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி அருகே விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை காரையூா் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. தொடா் விசாரணையில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக கடத்தலில் தொடா்புடைய புதுக்கோட்டை கடையக்குடி ரா.சுகுமாா், அன்னசத்திரம் சு.ராமன் ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT