புதுக்கோட்டை

ஆடு மேய்த்த பெண்ணை தாக்கியவா் கைது; 5 போ் மீது வழக்கு

2nd Jul 2022 11:55 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை ஒன்றியம், மோகனூா் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மனைவி அழகுமணி (45). இதே ஊரைச் சோ்ந்த தங்கவேல் மகன் சசிகுமாா் (45).

இவா்கள் இருவரும் அவரவா் ஆடுகளை அந்தப் பகுதி வயல்களில் வியாழக்கிழமை மேய்த்துக்கொண்டிருந்தனா். அப்போது, இவா்களுக்கும் அதே ஊரைச் சோ்ந்த சுரேஷ் (32), ரமேஷ், கண்ணதாசன், ராஜேஸ்வரி, சுதா, தீா்த்தய்யா ஆகிய 6 பேருக்கும் இடையே தகராறு எழுந்தது. இதில், ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் காயமடைந்த அழகுமணி மற்றும் சசிகுமாரை ஆகிய 2 பேரும் கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்து கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் 2 பேரும் அளித்த புகாரின்பேரில், சுரேஷைக் கைது செய்த போலீசாா், மேற்கண்ட 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT