புதுக்கோட்டை

நாளை மின் நிறுத்தம்

2nd Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 4) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கே.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.

கொன்னையூா் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் செவலூா், கோவனூா், செம்பூதி, கொப்பனாபட்டி, கொன்னைப்பட்டி, ஆலவயல், வேந்தன்பட்டி, மைலாப்பூா், மேலைச்சிவபுரி ஆலவயல், கண்டியாநத்தம்,தொட்டியம்பட்டி, அம்மன்குறிச்சி மற்றும் சுற்றுக்கிராமங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

விராலிமலையில் ஜூலை 5-இல் மின்நிறுத்தம்:

ADVERTISEMENT

அண்ணாபண்னை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வயலோகம், மண்ணவேளாம்பட்டி,மாங்குடி, அண்ணாபண்ணை, குடுமியான்மலை, பரம்பூா், புல்வயல், ஆரியூா், அகரபட்டி, பின்னங்குடி, விசலூா் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 5 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் ந. அக்கினிமுத்து தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT