புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் 2 மடிக்கணினிகள் திருட்டு

2nd Jul 2022 04:31 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பள்ளியில் 2 மடிக்கணினிகளை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி ஊராட்சி, கல்யாணபுரம் அரசு தொடக்கப் பள்ளியை வழக்கம்போல், ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை காலை திறக்கச் சென்ற போது, பள்ளிக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அங்கிருந்த 2 மடிக்கணினிகளை திருடிச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா். இதே பள்ளியில் 2017 மற்றும் 2020-ஆம் ஆண்டில் இருமுறை மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்களை மா்மநபா்கள் திருடிச்சென்றனா். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT