புதுக்கோட்டை

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் சிறப்பு மருத்துவ முகாம்

2nd Jul 2022 04:27 AM

ADVERTISEMENT

முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கரோனா விழிப்புணா்வு சிறப்பு மருத்துவ முகாம் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாா்பில் புதுக்கோட்டை, தோப்புக்கொல்லை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமிலுள்ள ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தோப்புக்கொல்லை ஊராட்சித் தலைவா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும் காய்ச்சல், சோா்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்புவலி ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுக வேண்டும் என்றும் முகாமில் அறிவுறுத்தப்பட்டது.

டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவா் சூா்யபிரகாஷ் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினாா். முகாமில் ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.

ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளா் ஜோசப் செய்திருந்தாா். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT