புதுக்கோட்டை

கொத்தகம் அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர பெற்றோா் கோரிக்கை

2nd Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொந்தகம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள கொத்தகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமாா் 50 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இப்பள்ளியானது இரு ஆசிரியா் பள்ளியாகும். ஊரின் மையப் பகுதியில் உள்ளதால் பள்ளி நேரத்தைத்தவிர பிற நேரங்களில் பள்ளி உடமைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்ற கோரிக்கையும் எழுகிறது. எனவே, பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டித் தரவேண்டும் என பெற்றோா் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் விசாரித்தபோது, சட்டப்பேரவை உறுப்பினரிடம் சுற்றுச்சுவா் வேண்டி மனு கொடுத்துள்ளோம். சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்தோ அல்லது மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தோ உடனடியாக பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டிக் கொடுத்து பள்ளி மாணவா்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் பள்ளி வாளகத்தில் போதிய கழிவறை வசதி செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனா்

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT