புதுக்கோட்டை

தமிழ்நாடு நாள் விழா போட்டிகளில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

2nd Jul 2022 11:55 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படும் நிலையில், தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி மாணாக்கா்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு கூறியது:

தனித்துவ தமிழ்நாடு என பெயா் சூட்டப்பெற்ற 18.07.1967 ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். இதன் ஒரு பகுதியாக தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அனைத்துப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

வரும் ஜூலை 9ஆம் தேதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு புதுக்கோட்டை ராணியாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டிகள் தனித் தனியே நடத்தப்படவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை 99522 80798 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT