புதுக்கோட்டை

ஆத்தங்கரை விடுதியில்நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

2nd Jul 2022 04:27 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், ஆத்தங்கரை விடுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னத்துரை வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்வில் எம்எல்ஏ பேசும்போது, தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை தனியாரிடம் விற்பனை செய்யாமல் தாங்கள் பகுதியிலேயே அரசிடம் விற்பனை செய்வதற்காகவே ஒவ்வொரு பகுதியிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

இதன்படி, இங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்வில், ஒன்றியக் குழுத் தலைவா் ஆா். ரத்தினவேல் காா்த்திக், ஊராட்சித் தலைவா் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT