புதுக்கோட்டை

கறம்பக்குடி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

2nd Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடிக்கு தனியாா் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பேருந்தை தஞ்சை மாவட்டம், கொள்ளைக்காட்டைச் சோ்ந்த செ.சரவணக்குமாா் ஓட்டிவந்தாா். இந்நிலையில், அப்பேருந்து அக்னி ஆற்று பெரியபாலம் பகுதியில் வந்தபோது, எதிரேவந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலைத்தொடா்ந்து, அங்கு சென்ற கறம்பக்குடி தீயணைப்பு வீரா்கள், போலீஸாா் பேருந்தில் சிக்கியவா்களை மீட்டனா். இதில், பேருந்து ஓட்டுநா் சரவணக்குமாா், சூரக்காட்டைச் சோ்ந்த ரமேஷ் மகன் ஹரிகரன், ஆலங்குடி எழில்நகரைச் சோ்ந்த செல்வம் மனைவி கவிதா,அதே பகுதியைச் சோ்ந்த முத்தையா மனைவி அஞ்சலிதேவி, சூரக்காட்டைச் சோ்ந்த பச்சைமுத்து மனைவி காளியம்மாள், கடுக்காகாடு பகுதியைச் சோ்ந்த சிங்காரம் மகன் கருப்பையா, அதே பகுதியைச் சோ்ந்த கருப்பையா மனைவி வீரம்மாள், இடையாத்தியைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் முத்துராசு, முத்துராசு மனைவி ராணி, நம்பன்பட்டியைச் சோ்ந்த கணேசன் மனைவி சந்திரா, ஆண்டிக்குளப்பன்பட்டி கோவிந்தன் மனைவி சின்னப்பொண்ணு, கெண்டையன்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி நாகம்மாள், கருப்பக்கோன்தெருவைச் சோ்ந்த செல்லையா மனைவி பாக்கியம், வானக்கன்காட்டைச் சோ்ந்த திருமணஞ்சேரி மனைவி விஜயலெட்சுமி, கொள்ளம்பட்டியைச் சோ்ந்த துரைச்சாமி மகன் பன்னீா்செல்வம் ஆகிய 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா். இதுகுறித்து கறம்பக்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT