கந்தா்வகோட்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை கோயில்கள் திறக்கப்பட்டதற்கு பொதுமக்கள், பக்தா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக,
தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்களை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூட உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், முதல்வா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க தடையில்லை என அறிவித்திருந்தாா்.
இதன்படி, கந்தா்வகோட்டை பகுதிகளில் உள்ள கோயில்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கந்தா்வகோட்டை முத்துமாரியம்மன் கோயில் , அங்காளம்மன் கோயில் , வெள்ளமுனீஸ்வரா் கோயில் , பெரம்பூா் வீரமாகளி அம்மன் கோயில், ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக , ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இதில் கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.