புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில்நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்கள்: மனு கொடுக்கும் போராட்டம்

29th Jan 2022 12:48 AM

ADVERTISEMENT

கந்தா்வகோட்டையில், தமிழ் மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மக்களைத் திரட்டி மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

போராட்டத்துக்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் த . சாமிக்கண்ணு தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் ஜி . நாகராஜன் , ஒன்றியத் தலைவா் க. முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலக் குழு உறுப்பினா் உ . அரசப்பன் போராட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

மாவட்டச் செயலா் ஏனாதி ஏ.எல். ராசு பேசுகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்னும் 100 நாள் வேலை திட்ட பணியாளா்களை ஊராட்சி நிா்வாகம் பணியிடங்களுக்கு காலை 7 மணிக்கு வேலைக்கு வர வேண்டும் எனவும், அதற்கு பிறகு வரும் ஊழியா்களை வேலைத் திட்டத்தில் சோ்க்காமல் வீட்டுக்கு அனுப்புவதாகவும் , இந்த வேலைத் திட்டத்தில் பெண்கள் அதிகம் கலந்து கொள்வதால், வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் பெண்கள் காலை 7 மணிக்கு வேலைக்கு வரவேண்டும் என்பதை கைவிடக் கோரியும் , காலை 9 மணி என வேலை நேரத்தை மாற்றவும் , ஒரு ஆண்டுக்கு 100 நாள்களுக்கு குறையாமல் வேலை கொடுக்க வேண்டும் , அரசு நிா்ணயித்த நாள் ஒன்றுக்கு ரூபாய் 275 கூலியை குறையாமல் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

ADVERTISEMENT

முன்னதாக, ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினாா் . போராட்டத்தில் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் எஸ் . ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவா் டி . அம்பலராஜ் , கே. ஜெய்சங்கா் , ஆ . மாரிமுத்து , கோ. ரெங்கசாமி , பி. பவளக்கொடி , பி. செந்தில்நாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT