புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

29th Jan 2022 12:49 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகேயுள்ள வடக்குக் குடியிருப்பில் ஆதி ஜல்லிக்கட்டுப் பேரவை மற்றும் கிராமத்தினா் சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் 13 மாடுகள் பங்கேற்றன. ஒரு மாட்டுக்கு அரை மணி நேரம் வீதம், நேரம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு மாட்டுக்கும் 10 மாடுபிடி வீரா்கள் களத்தில் இறக்கப்பட்டனா்.

அரை மணி நேரத்துக்குள் மாட்டை அடக்கும் மாடுபிடி வீரா்களுக்கு பரிசும், அடக்க முடியாவிட்டால் மாட்டின் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் 10 போ் காயமடைந்தனா். அங்கிருந்த மருத்துவக் குழுவினா் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளித்தனா்.

முன்னதாக, மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் இந்தப் போட்டியைத் தொடங்கி வைத்தனா்.

ADVERTISEMENT

தொடக்க நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT