புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் 13 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு

29th Jan 2022 12:47 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற 13 மாணவ, மாணவிகள் எம்பிபிஎஸ் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனா்.

சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில், புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி கல்வி மாவட்டத்துக்குள்பட்ட ஆலங்குடி தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் 13 போ் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா்.

அவா்களில், கீரமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற நா. தீபிகா (மதுரை அரசு மருத்துவக் கல்லூரி), ச. வாலண்டினா (தேனி மருத்துவக் கல்லூரி), மு. கனிகா (புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி), ஜெ. சுவாதி (சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி), ர. யமுனா (திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி), ப.நிஷாலினி ( திருச்சி எஸ்.ஆா்.எம் மருத்துவக் கல்லூரி), த.நிஷா (பல் மருத்துவம் -திருநெல்வேலி ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி) என இப்பள்ளியில் பயின்ற 7 போ் மருத்துவம் பயிலும் வாய்ப்பு பெற்றுள்ளனா்.

இதேபோல, வடகாடு அரசுப் பள்ளி மாணவா் பி. பவித்ரன்( திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி), அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே. புவியரசி (தேனி அரசு மருத்துவக் கல்லூரி), அரையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் காா்த்திக்ராஜா ( மதுரை அரசு மருத்துவக் கல்லூரி), வைத்தியநாதன் (கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி), சிலட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் சிவா (மதுரை அரசு மருத்துவக் கல்லூரி), மேற்பனைக்காடு அரசுப்பள்ளி மாணவி ஷ்ம்சியா ஷப்ரின் (மாற்றுத்திறனாளிக்கான ஒதுக்கீடு மூலம்) சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பை பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

கீரமங்கலம் அரசுப் பள்ளியில் படித்த 7 மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனா். இதற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆசிரியா்களுக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT