புதுக்கோட்டை

நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

28th Jan 2022 05:34 AM

ADVERTISEMENT

ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்து, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் கொள் முதல் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டுமென தமிழக ஏரி , ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

புதுக்கோட்டையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்த்தின் மாநிலத் தலைவா் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆன்லைன் பதிவு முறைகளை ரத்து செய்துவிட்டு நெல் கொள்முதல் பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும். ஒருவரே தொடா்ந்து பயனடைவதைத் தவிா்த்து, அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் திட்டங்கள் கிடைப்பதை ஆட்சியா் உறுதி செய்ய வேண்டும். ஆறுகளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளைக் கட்டி நிலத்தடிநீா் மட்டத்தை உயா்த்த வேண்டும். தேசிய வங்கிக் கிளைகளில் இருந்து கடனைத் திருப்பிச் செலுத்துமாறு விவசாயிகளுக்கு நெருக்கடி தரும் போக்கைக் கைவிட வேண்டும். மாவட்டம் முழுவதும் நீா்நிலைகளை முறையாக தூா்வார வேண்டும், கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்க முதல்வா் ஸ்டாலின் பிரதமா் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும், விவசாய மின்இணைப்பில் மீட்டா் பொருத்துவதைக் கைவிடக்கோரியும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரியும் பிப்.10-ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT