புதுக்கோட்டை

உள்ளாட்சித் தோ்தல்: பாஜகவினா் ஆலோசனை

28th Jan 2022 05:33 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பாஜக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகா் திடலில் உள்ள தனியாா் மண்டபத்தில் கட்சியின் மாவட்டத் தலைவா் ராமசேதுபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவினா் போட்டியிடுவதற்கான விருப்பமனு, தோ்தலுக்கான களப்பணி, கட்சியினா் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றன.

கூட்டத்தில், கட்சியின் ராமேஸ்வரம் கோட்ட அமைப்புச் செயலா் பாண்டுரங்கன், மாவட்டப் பாா்வையாளா் பி.எம் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவரும், நகராட்சி தோ்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி கணேசன், மாவட்டப் பொதுச் செயலாளரும், பேரூராட்சி தோ்தல் பொறுப்பாளருமான சிவசாமி ஆகியோா் பெறப்பட்ட விருப்ப மனுக்கள் குறித்து ஆய்வுப் பட்டியல் வெளியிட்டுப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT