புதுக்கோட்டை

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

28th Jan 2022 05:33 AM

ADVERTISEMENT

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செட்டிகுளம் வடகரை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செட்டிகுளம் வடகரை முத்துமாரியம்மன் கோயில் பல லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது,. இதையொட்டில், இருதினங்களாக கோயில் வளாகத்தில் பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றுவந்தன. தொடா்ந்து, வியாழக்கிழமை காலை வாணவேடிக்கைகள் முழங்க மேலதாளங்களுடன் புனித நீா் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT