புதுக்கோட்டை

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டையில் ஏஐடியுசி போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மண்டலப் பொதுச் செயலா் டிஎம். கணேசன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டத் தலைவா் கேஆா். தா்மராஜன், மாவட்டப் பொதுச் செயலா் வீ. சிங்கமுத்து, மத்திய சங்க மண்டலத் துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில்,

14ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே துவக்க வேண்டும். 31 சதவிகித அகவிலைப்படி உயா்வை உடனே வழங்க வேண்டும். அகவிலைப் படி நிலுவைத் தொகையைக் கணக்கிட்டு வழங்க வேண்டும். மகளிா் கட்டணமில்லா பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநா், நடத்துநா்களுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இரவு ஊரடங்கு காலத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும் பயணிகள் இல்லாத நிலையில் பேருந்துகள் இயக்குவதை நிறுத்த வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆகக் குறைக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையையே அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT