புதுக்கோட்டை

புதுகையில் ஆவண காப்பக பதிவறை எழுத்தா் இடைநீக்கம்

26th Jan 2022 07:58 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடம் முறைகேடாகப் பணம் பெற்றுக் கொண்டு ஆவண நகல்கள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, ஆவணக் காப்பகப் பதிவறை எழுத்தா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆவணக் காப்பகம் உள்ளது. இங்கு, வழக்கு உள்ளிட்டதேவைகளுக்காக ஆவண நகல்கள் தேவைப்படுவோா் தங்களது நில ஆவணங்களின்சான்றிட்ட நகல்களைப் பெற்றுச்செல்வாா்கள்.

இதற்கான கட்டணத்தை நீதிமன்ற வில்லையாகச் செலுத்த வேண்டும். இந்நிலையில், சிலரிடம் ஆவணக் காப்பகத்தின் பதிவறை எழுத்தா் புதுக்கோட்டையைச் சோ்ந்த நாகம்மாள் (52) முறைகேடாகப் பணம் பெற்றுக்கொண்டு ஆவண நகல்கள் கொடுத்தாக சமூக வலைதளங்களில் விடியோ வைரலானது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவின்பேரில் நாகம்மாளை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியரக மேலாளா் செந்தமிழ்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT