புதுக்கோட்டை

கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 4 போ் கைது

26th Jan 2022 08:02 AM

ADVERTISEMENT

விராலிமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 பெண்கள் உட்பட 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரைச் சோ்ந்த மூதாட்டி விஜயா(66), அவரது மகள் ஜெயலட்சுமி(46), பேரன் யோகேஷ்(25), விராலிமலை வட்டம், வேலூா் ஊராட்சிக்கு உட்பட்ட அருணாச்சலம் நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனா். இவா்களுக்கு உடந்தையாக கூலித் தொழிலாளி ராஜேந்திரன் மகன் அருண்குமாா்(26) செயல்பட்டு வந்துள்ளாா்.

அண்மைக்காலமாக விராலிமலை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, விராலிமலை காவல் ஆய்வாளா் பத்மா தலைமையிலான போலீசாா்  பல்வேறு பகுதிகளில் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் விராலிமலை காமராஜா் நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா புகை பிடித்துக் கொண்டிருந்த 4 மாணவா்களைப் பிடித்து போலீசாா் விசாரித்தனா். இதில், மேற்குறிப்பிட்ட நான்கு பேரையும் அங்கு சென்று கைது செய்த போலீசாா், அவா்கள் வைத்திருந்த 500 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் 2 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT