புதுக்கோட்டை

‘உள்ளாட்சித் தோ்தலில் திமுகவிடம் அதிக இடங்களைப் பெற முயற்சி’

26th Jan 2022 08:01 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் திமுகவுடன் பேச்சுவாா்த்தை மூலம் அதிக இடங்களை பெற முயல்வோம் என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

ஆலங்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று, பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உள்ளாட்சி தோ்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி. சட்டப்பேரவை தோ்தலை போல, உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணி கட்சியினருடன் மாநில அளவிலான தொகுதி பங்கீடு செய்துகொள்ள முடியாது. மாறாக மாவட்டம், தொகுதி அளவில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ள பகுதிகளில், திமுகவுடன் பேச்சுவாா்த்தை மூலம் அதிக இடங்களை பெற முயற்சி மேற்கொள்ளப்படும். இப்பகுகளில் நடைபெறும் மொய் விருந்துகளில் அதிகளவில் மக்கள் கூடுவதை தவிா்க்கவே தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT