புதுக்கோட்டை

புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற் பள்ளிகள் தொடங்க ஆா்வமுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

2022-2023ஆம் கல்வியாண்டுக்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், தொடா் அங்கீகாரம் பெறுதல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

2022-2023ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி, ஓா் இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கிக் கணக்கில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் அலுவலகங்களைத் தொடா்பு கொண்டும் விபரம் பெறலாம் என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

போராடி பெற்ற வாக்காளர் அட்டை: இலங்கை அகதிகள் முகாமிலிருந்து முதல் வாக்காளர்

பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியம் -ஜெ.பி. நட்டா

சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT