புதுக்கோட்டை

திருக்குறள் ஒப்பித்து பரிசு பெற்ற அரசுப் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

12th Jan 2022 09:27 AM

ADVERTISEMENT

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருச்சி மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டியில், 1330 குறட்பாக்களையும் ஒப்பித்து சிறப்புப் பரிசு பெற்ற மேல்மங்களம் அரசுப் பள்ளி மாணவா் மு. கஜீவனை ஆட்சியா் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

2021-2022 ஆண்டிற்கான மண்டல அளவிலான திருக்குறள் முற்றோதல் போட்டி திருச்சியில் தமிழ் வளா்ச்சித் துறையின் இணை இயக்குநா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டியில் அறந்தாங்கி கல்வி மாவட்டம், மேல்மங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மு. கஜீவன் பங்கேற்று 1330 குறட்பாக்களையும் ஒப்பித்து சிறப்புப் பரிசை வென்றாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா் கஜீவனை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலா் நடராஜன், பள்ளித் தலைமை ஆசிரியா் இங்கா்சால், ஆசிரியா்கள் முத்துக்குமரன், பாரதிதாசன் ஆகியோரும் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT