புதுக்கோட்டை

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கையெழுத்து இயக்கம்

12th Jan 2022 09:24 AM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதுக்கோட்டை நகராட்சிப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம், பிருந்தாவனம், டிவிஎஸ் முக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தக் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: மாவட்டத் தலைமை மருத்துவமனையாக செயல்பட்ட டாக்டா் முத்துலட்சுமி அம்மையாா் மருத்துவமனையை மீண்டும் நகராட்சி மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். சித்தா மற்றும் ஹோமியோபதி பிரிவுகளுக்கான பணியிடங்களை அதிகப்படுத்தி உள்நோயாளிகள் பிரிவு தொடங்க வேண்டும்.

புதுக்கோட்டை நகரம் முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும். புதை சாக்கடைகளை சீரமைத்து புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தோரண வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ADVERTISEMENT

அக் கட்சியின் நகரச் செயலா் ஆா். சோலையப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி. நாகராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் காயத்ரி, நகரக் குழு உறுப்பினா்கள் அடைக்கலசாமி, பாண்டியன், மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT