புதுக்கோட்டை

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் ஆய்வு

1st Jan 2022 03:08 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளை மாவட்டப் பாா்வையாளரும் தமிழ்நாடு கடல்சாா் வாரியத் துணைத் தலைவருமான கே. பாஸ்கரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி, ஜனவரி 5-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதையொட்டி, நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் தொடா்பாக, பாா்வையாளா் 3-ஆவது கட்டமாக இந்த ஆய்வை மேற்கொண்டாா்.

மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கவிதா ராமு தலைமை வகித்தாா். வரப்பெற்றுள்ள திருத்த விண்ணப்பங்களை முறையாக கையாளுவது, முக்கிய பிரமுகா்களின் பெயா்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வது, தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் போட்டிகளை நடத்துவது குறித்தும் இந்த ஆய்வில் பேசப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ)து. தங்கவேல், கோட்டாட்சியா்கள் அபிநயா, எம்.எஸ். தண்டாயுதபாணி, சொா்ணராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT