புதுக்கோட்டை

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அதிகாலையில் தீ : 4 கடைகள் நாசம்

22nd Feb 2022 04:17 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமாயின.

அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே காந்தி பூங்கா சாலையில் ஹோட்டல், கைப்பேசி பழுதுநீக்கும் நிலையம், பிளாஸ்டிக் நிறுவனம், வாட்ச் கடை போன்றவை உள்ளன. திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில் இங்குள்ள கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 கடைகள் எரிந்து நாசமாயின. இதில் சுமாா் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமாயின.

அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா். அறந்தாங்கி காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT