புதுக்கோட்டை

சிறுதானிய உணவு தயாரிப்புப் போட்டி

22nd Feb 2022 04:14 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் பாரம்பரிய சிறுதானிய உணவு தயாரிப்புப் போட்டி திங்கள் கிழமை நடைபெற்றது.

கண்டியாநத்தம் ஊராட்சியில் பெண்களுக்கான சிறுதானிய உணவு தயாரிப்புப் போட்டி நடத்தப்பட்டு சிறப்பான உணவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவைகளில் இருந்து பல்வேறு வகையான உணவுவகைகளை மகளிா் சமைத்தனா். போட்டியில் சிறப்பாக சிறுதானிய உணவு சமைத்த பெண்களுக்கு ஊராட்சிமன்ற தலைவா் செல்வி முருகேசன் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT