புதுக்கோட்டை

இலுப்பூா் பேரூராட்சிப் பகுதிகளில் கொடி அணிவகுப்பு

17th Feb 2022 01:46 AM

ADVERTISEMENT

 

விராலிமலை: இலுப்பூா் பேரூராட்சிப் பகுதிகளில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெற உள்ளதையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் உத்தரவின்பேரில், இலுப்பூா் உட்கோட்டத்துக்குள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன் தலைமையில் இலுப்பூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு ஆய்வாளா்கள் சந்திரசேகா் (அன்னவாசல்), பத்மா (விராலிமலை), உஷா நந்தினி (இலுப்பூா்) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசாா் மற்றும் காவலா்கள் இந்தக்கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT