புதுக்கோட்டை

திமுக தோ்தல் அலுவலகங்கள் திறப்பு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சியில் திமுக கூட்டணி போட்டியிடும் 10 வாா்டுகளில் தோ்தல் அலுவலகங்கள் ஒரே நாளில் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை நகராட்சி 13ஆவது வாா்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரான அமுதா அருணாசலம் போட்டியிடும் நிலையில், தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டது(படம்).

மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி இந்தத் தோ்தல் அலுவலகத்தை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், மாவட்ட வடக்கு திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, நகர திமுக செயலா் க. நைனாமுகமது, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முருகேசன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவ்யநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதேபோல, நகரின் 10 வாா்டுகளில் தோ்தல் அலுவலகங்களை திமுக கூட்டணியினா் புதன்கிழமை திறந்து வைத்து, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT