புதுக்கோட்டை

கைதான ஆா்எஸ்எஸ் நிா்வாகி ஜாமீனில் விடுவிப்பு

1st Feb 2022 02:59 AM

ADVERTISEMENT

பெண்களை அவதூறாகப் பேசியதாக கைதான ஆா்எஸ்எஸ் நிா்வாகி ஜாமீனில் திங்கள்கிழமை வெளியே வந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், இலுப்பூா் சமாதானபுரத்திலுள்ள மத அமைப்பின் ராணி, தேவசாந்தி ஆகியோா் திம்மம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கா்ப்பிணியை மதம் மாற்றம் செய்ய வந்ததாகக் கூறி,

அந்தப் பெண்களை அவதூறாகப் பேசியதாக புதுக்கோட்டை மாவட்ட ஆா்எஸ்எஸ் செய்தித் தொடா்பாளரான திம்மம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கணேஷ்பாபு (38) மீது வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 4 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீசாா் வழக்கு பதிந்து சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். இதைக் கண்டித்து இலுப்பூா், புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா உள்ளிட்ட 339 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே கீரனூா் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த கணேஷ்பாபுவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி பிச்சைராஜன், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இலுப்பூா் நீதிமன்றத்தில் தினமும் கணேஷ்பாபு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினாா். இதைத்தொடா்ந்து, சிறையில் இருந்து கணேஷ்பாபு விடுதலை செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT