புதுக்கோட்டை

புள்ளான்விடுதியில் விநோத வழிபாடு

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகே விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை தீயை விழுங்கி விநோத வழிபாட்டில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதி விநாயகா் கோயிலில் மாா்கழி மாதத்தில் விநாயகா் நோன்பு சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். நிகழாண்டு நடைபெற்றுவரும் வழிபாட்டில், வியாழக்கிழமை விநாயகருக்கு படையலுடன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், மாவிளக்கில் திரி வைத்து தீயிட்டு அதை சாப்பிட்டு கிராம மக்கள் விநோத வழிபாட்டில் ஈடுபட்டனா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT